Translate

Saturday, September 19, 2020

ஆச்சியின் (அ/ஆ)ப்பம்!

அப்புக்கு அப்பம் என்றால் அலாதிப் பிரியம் ஆனால் ஆச்சிக்கோ அலுப்புவேலை. மாவிடிக்க ஆள் பிடித்து, கள்ளு வாங்க காவல் இருந்து, பதமாய் குழைத்து, இரவெல்லாம் புளிக்க வைத்து...... காலமை வேளைக்கு எழும்பி, தேங்காய் திருவி, முதல் பால் எடுத்து, அப்பச்சட்டியில் பக்குவமாய் மாவை வார்த்து ஒரு சுழட்டு, ஒரு சுத்து சுத்தி எடுத்து, பால் அப்பம், வெள்ளை அப்பம் எனச்சுட்டு எடுக்கிறதுக்குள் ஆச்சி ஆடிப்போய் விடுவா. அன்று காலமை பக்கத்து வீட்டு பாட்டியுடன் வேலியால் கதைச்ச ஆச்சிக்கு அந்தப்பாட்டி அப்பத்துக்கு அரிசி ஊற வைக்கப் போற விசயம் தெரிந்ததும், ஆகா.... என்று ஆச்சி மனதில் மின்னல் அடித்தது, பாட்டியிடம் ஆச்சி சிரிச்சு சிரிச்சு கதைச்சு, அரைக்கொத்து அரிசியையும், இரண்டு தேங்காயையும் கொடுத்து பத்து அப்பத்துக்கு சொல்லிவிட்டா. பாவம் அந்தப்பாட்டி நல்லா மாட்டிக்கொண்டா. ஆச்சி தன்டை திறமையை அப்புவிடம் சொல்லிப் பெருமைப்பட்டா. அப்புக்கும் தெரியும்தானே தன்டை மனுசியின் சகலகலாவல்லமை. 

 

No comments:

Post a Comment