Translate

Saturday, September 19, 2020

அப்புக்கு ஆச்சி சுட்ட வடை!

அடுத்தநாள் பின்னேரம், ஆனால் இன்று மழை இல்லை, மப்பாக இருந்தது. அப்பு அதே சாய்மனையில் சும்மா படுத்து இருந்தார். ஆச்சிக்கு மனசு கேட்கவில்லை, குசினிக்கு விறு விறு என ஓடினா, கொஞ்சத்தாலே வடை பொரித்த வாசம் வாசல் வரை வரவே, சும்மா படுத்திருந்த அப்புவும் எழுந்து, பொக்கைவாய் சிரிப்புடன் குசினியை எட்டிப்பார்த்தார். அப்போது பக்கத்து வீட்டுத் தாத்தாவின் கூப்பிடுகுரல் படலையால் வரவே, அவரிடம் அப்பு தன்ரை மனிசி தனக்குப் பிடித்த தட்டைவடை சுடுறா நாளைக்கு கதைக்க கோயிலடிக்கு வாரேன் என்றார். அதைக் கேட்ட ஆச்சி சிரித்துக் கொண்டே அப்புவிடம் இஞ்சாருங்கோ இன்டைக்கு உங்களுக்கு சுக்கு தேத்தண்ணி வேணுமோ என்டா, அப்புவும் ஓம் ஓம் என்று தலையாட்டினார். ஆச்சியும் கையில் சுக்கு தேத்தண்ணியுடனும், வடையுடனும் நின்டா. அப்புக்கு ஒரே புழுகு. ஆச்சியின் வடைக்கிண்ணியை எட்டிப்பார்த்த அப்புக்கோ பேரதிர்ச்சி! அப்புக்கும் இரும்பு மனசுதான். அப்புக்கு ஆச்சி சுட்ட வடை தட்டைவடை இல்லை மெதுவடை!

No comments:

Post a Comment