அன்று சனிக்கிழமை, ஆச்சி அருகில் உள்ள சங்கக்கடைக்கு வழமையாக போகும்நாள். அப்புவிடம் சொல்லிவிட்டு ஆச்சி தனது நடையைக்கட்டினார். ஆச்சியைக் கண்டதும் சங்கக்கடையில் வேலைசெய்யும் எல்லோருக்கும் வலு சந்தோசம், ஆச்சி சங்கக்கடைக்குப் போகும்போதெல்லாம் அவையளுக்கு ஏதாவது ஒரு நொறுக்குத்தீணி செய்து கொண்டுபோய் பாசத்துடன் கொடுப்பா. அன்டைக்கும் அவகையில் பகோடா இருந்துச்சு. சங்கக்கடையில் பல சாமான்களோடு வெள்ளைஎள்ளும் அரைக்கிலோ வாங்கினா ஆச்சி. அங்கு வேலைசெய்யும் ஒருவர் ஆச்சியின் சாமான்கள் உள்ள பையை தன்டை வண்டியில் கொழுவினார். ஆச்சியும் பாவம்தானே, அவையள்தான் ஆச்சியின் சாமான்களை தங்கடை வண்டியில் கொண்டுபோய் ஆச்சியின் வீட்டே கொடுப்பினம். அடுத்தமுறை எங்களுக்கு எள்ளுப்பாகுவா ஆச்சி என்டு அவர் கேட்க, ஆச்சியும் சிரிச்சா.
No comments:
Post a Comment