நல்ல நட்பு நாளும் வேண்டும். நல்லது சொல்லவும், நட்பு பாராட்டவும். நல்ல நண்பர்கள் அமைவதெல்லாம் நாம் செய்த நல்வினையே! நட்புக்கு இலக்கணம் நாம் வைக்கும் நம்பிக்கை. நம்பிக்கையின் நன்மதிப்பு இருவருக்கும் தெரியவேண்டும். ஏற்றத்தாழ்வு பார்த்து வந்தால் அது நட்பல்ல வெறும் நடிப்பு. இன்பத்தில் மட்டுமல்ல துன்பத்திலும் வேண்டும் நட்பு. முன்னோர் சொன்ன அகநட்பே நல்ல நட்பு. தோள் கொடுக்க நல்ல நட்பிருந்தால் வெல்லலாம் இந்த உலகை!
No comments:
Post a Comment