ஆச்சிக்கு முறுக்கு என்டால் கொள்ளை விருப்பம். விதவிதமாய் முறுக்கு சுட்டு சுட்டு பேணியில் போட்டு வைப்பா. முந்தநாள் உளுத்தமாவில் அரிசிமாவு, தேங்காய்ப்பால், எள்ளு, சின்னச்சீரகம் சேர்த்து சுவையான முறுக்கு செய்தா. இன்று அப்புவைப் பார்க்க அடுத்த வீட்டுத் தாத்தா கையில் நாளிதழோடு வந்தார். அப்புவும் அவரை வரவேற்று, இருவரும் திண்ணையில் இருந்து நாட்டு நடப்பு கதைத்தனர். தாத்தாக்கு முறுக்கும், கோப்பியும் கொண்டுவந்து கொடுத்தா ஆச்சி. தாத்தா முறுக்கை கொறித்தபடி அப்புவிடம் சொன்னார், கொடுத்து வைத்து இருக்கிறாயப்பா. இப்படி தினமும் விதவிதமாய்ப் பலகாரம் செய்துதார மனுசி கிடைச்சதுக்கு என்டு. அப்புவும் ஒப்புக்கு தலையாட்டினார். அப்புக்கு மட்டும் தானே தெரியும் ஆச்சிக்குத்தான் முறுக்கு பிடிக்கும் என்டு.
No comments:
Post a Comment