மாலை நேரம் அடைமழையும் பெய்யுது, சாய்மனையில் படுத்திருந்து வானொலியில் ஒலிபரப்பிய பழைய பாடல்களை அப்பு கேட்டுக் கொண்டிருந்தார். ஆச்சியும் அவர் பக்கத்திலிருந்து வெத்திலை போட்டுக் கொண்டிருந்தா. ஆச்சியிடம் அப்பு இஞ்சாருமப்பா, ஒரு தேத்தண்ணி போடு என்றார். வேறு ஏதேனும் உங்களுக்கு வேணுமோ என்று ஆச்சி அப்புவிடம் கேட்க, பொக்கைவாய் சிரிப்புடன் அப்புவும் சொன்னாரே ஒரு பதில்...... ஆச்சி ஆடிப்போனா, அதிர்ச்சியில் ஆசுப்பத்திரிக்கு போயிருப்பா என்டாலும் ஆச்சிக்கு இரும்பு மனசுதான். என்ன கேட்டார் அப்பு? தேத்தண்ணியும், தனக்குப்பிடித்த மொறு மொறு தட்டைவடையும்!