Translate

Tuesday, October 6, 2020

ஆதி மொழி!

2000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் ஆறே ஆறு சமுதாய மக்களே முக்கியமானவர்கள்.

1. *தமிழர்கள்*
2. *சீனர்கள்.*
3. *ஆரியர்கள்.*
4. *அரபியர்கள்.*
5. *ரோமர்கள்.*
6. *கிரேக்கர்கள்.*
 
கிரேக்கர்கள் தங்களை கிரேக்கர்கள் அழைத்துக் கொண்டதோடு மற்றவர்களை பிசாசுகள் என அழைத்தனர்.

ரோமர்கள் தங்களை ஆளப்பிறந்தவர்கள் எனவும் மற்றவர்கள் வாழத்தகுதியற்றவர்கள் எனக் கருதினர்.

அரபியர்கள் தங்களைப் பேசத்தெரிந்தவர்கள் எனவும் மற்ற மக்களை அஜமிகள் அதாவது ஊமையர்கள் எனவும் கூறினர்.

ஆரியர்கள் தங்களை உயர்ந்தவர்களாகவும் கடவுளுக்கு நிகரானவர்கள் என்றும் மற்றவர்களை மிலேச்சர்களாக அதாவது கீழானவர்களாகவும் கருதினர்.

சீனர்கள் தங்களை முதலாளிகளாகவும் மற்றவர்களை அடிமைகளாகவும் நடத்தினர்.

தமிழர்கள் மட்டும் '
*யாதும் ஊரே யாவரும் கேளிர்* என்றனர்.

ஏனென்றால் தமிழர்கள் மட்டும்தான் இந்த உலகில் இருக்கும் அனைத்து உயிர்களையும் நேசிக்க தெரிந்தவர்கள்.

*இதுவே தமிழர் பண்பாடு.*

# படித்ததில் பிடித்தது

Saturday, October 3, 2020

உறவு!

நம்பிக்கை!

சோதிடம்!

ஜாதக பலன்கள்!

ஜாதக பலன்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நமக்கு நினைவில் வருவது ராசி நட்சத்திரம் லக்கினம் ராசி கட்டம். 

ஆனால் இவை எல்லாம் இல்லாமலே, உங்களை பற்றி உங்கள் குணத்தை பற்றி ஒரு 25 % சரியாக சொல்ல முடியும்.

அவை தான் தினசுத்தி படலம்.

நீங்கள் பிறந்த வருடம் மாதம் கிழமை திதி கரணம் யோகம் ஓரை காலம் என உங்கள் ஜாதகத்தில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு அர்த்தம் உண்டு. ஒரு பலன் உண்டு. 

உதாரணமாக 90s kid எனப்படும் 1989 ஏப்ரல் to 1990 ஏப்ரல் வரை சுக்கில வருடத்தில் பிறந்தவர்கள் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருப்பார்கள். உண்மை நேர்மை என்று இருப்பார்கள். பயந்த சுபாகம் இருக்கும். எதிர்பாலினரிடம் மரியாதையாக நடந்து கொள்வார்கள்.

2k kids எனப்படும் 2000 ஏப்ரல் to 2001 ஏப்ரல் வரை  விக்கிரம வருடத்தில் பிறந்தவர்கள் சொகுசாக வாழ கூடியவர்கள். தாராள குணம் இருக்கும். 

80s kid எனப்படும் 1980 ஏப்ரல் to 1981 ஏப்ரல் வரை வரை ரவுத்ரி வருடத்தில் பிறந்தவர்கள் எளிமையாகவும் வெகுளியாகவும் இருப்பார்கள்.

அது போல மார்கழி மாதம் பிறந்தவர்கள் கை வைத்தியம் கற்றவர்களாக இருப்பார்கள். புரட்டாசி மாதம் பிறந்தவர்கள் கதைகள் படிக்க விருப்பம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

வெள்ளிக்கிழமை பிறந்தவர்களுக்கு ஆடை அலங்கார விருப்பம் இருக்கும்.

சாத்வீக குண வேளையில் பிறந்தவர்களுக்கு பொறுமை adjust பண்ற குணம் இருக்கும். 

பஞ்சமி திதியில் பிறந்தவர்களுக்கு எதிர்பாலின நட்பு அதிகம் இருக்கும்.

சகுனி கரணத்தில் பிறந்தவர்கள் அறிவாளியாக இருப்பார்கள் 

பிராம்ய யோகத்தில் பிறந்தவர்கள் சமூக சேவையில் ஈடுபாடு இருக்கும். அவர்களுக்கு செவ்வாய் யோகம் செய்யும் கிரகமாக இருக்கும்.

இப்படி உங்கள் ஜாதகத்தில் இருக்கும் ஒவ்வொரு விஷயமும் முக்கியமானவை தான். 

மேலோட்டமாக ஒரு ஜாதகம் பார்க்கும் போது அது யோகமாக தெரியும். ஆனால் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பார்கள். அல்லது கஷ்டப்படுற மாதிரி இருக்கும். கோடீஸ்வரர்களாக இருப்பார்கள். இப்படி பல விடை தெரியாத கேள்விகளுக்கு திதி  யோகம் என்று சகலத்தையும் ஆராய்ந்து பலன் எடுத்தால் விடை கிடைக்கும். ஆனால் அது கொஞ்சம் சிரமமான வேலையும் கூட.
#பிரதி

சதுரகிரி

#பிரதி
சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் சுணங்க விருட்சம் என்னும் மரம் உள்ளது.

இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும். அந்தக் காய் கனிந்து விழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும். விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும் அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்.
அதேபோல் ‘ஏர் அழிஞ்ச மரம்’ என்றொரு மரம் உண்டு. இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன் கீழே விழுந்து விடும். விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும். இடையில் மழை, காற்றினால் மரத்தை விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில்
வந்து ஒட்டிக்கொள்ளும்.

இந்த ‘ஏர் அழிஞ்ச மரத்தின்’ கொட்டைகளை எடுத்து எண்ணையில ஊறவைத்து அதன் மூலம் கிடைக்கும் மையை உபயோகித்து வசியம் செய்வது ஒரு வகை.

சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில் கனையெருமை விருட்சம் என்றொரு மரமுண்டு. அம்மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும். அம்மரத்தை வெட்டினால், குத்தினால் பால் வரும்.

இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு. இந்தவிருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும். வெட்டினால் பால் கொட்டும். நவபாஷண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின் பாலும் முக்கியமான சேர்க்கையாகும்.

இவை எல்லாவற்றையும் விட தூக்கி சாப்பிடும் விஷயம் ஒன்று உள்ளது. மலையில் மிக அடர்ந்த பகுதியில் – ” மதி மயக்கி வனம்” என்ற பகுதி உள்ளது. இங்கே உள்ளே சென்றவர்கள் , மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர். நான் கேள்விப்பட்ட வரை , எங்கள் அருகில் இருக்கும் கிராமத்துக் காரர் ஒருவர் வழி தவறி உள்ளே சென்று மாட்டிக்கொண்டு விட்டார். “மகாலிங்கம் காப்பாத்து, காப்பாத்து” என்று மூன்று நாட்கள் கதறி, ஒரு வழியாக அந்த வனத்திலிருந்து வெளியே வந்து விட்டார். அடர்ந்த காடு, நிறைய பூச்செடிகள் இருந்தது. எதுவும் கோவில் கூட இல்லை. ஆட்களே யாரும் இல்லை. பசியே தெரியவில்லை. வெளியே வந்தது ஆண்டவன் அருள் என்று, இன்றும் அவர் திரும்ப திரும்ப புலம்பிக் கொண்டே இருக்கிறார்.
இன்றும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் – சித்தர்கள், ரிஷிகள் – மகாலிங்க பூஜை செய்ய வருகின்றனர். கூட்டம் கூட்டமாக நட்சத்திரங்கள் மலைப்பகுதிகளில் விழுகின்றன. வீடியோ காமிராக்களில் அதை நிறைய பகதர்கள் பதிவு செய்து இருக்கின்றனர். ஏற்கனவே நாம் ” கட்டை விரல் அளவில் காட்சி தந்த சித்தர் பற்றிய பதிவை வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளோம். இவை அத்தனையும் சர்வ நிஜம். இறை நம்பிக்கை உள்ள பக்தர்கள் , வாழ்வில் ஒரு முறையேனும் இந்த மகாலிங்கத்தையும் , சந்தன மகா லிங்கத்தையும் – மனமுருக பூஜித்து வழிபட்டு வாருங்கள். நீங்கள் நினைத்ததை சாதிக்கும் வல்லமையை அந்த சிவம் உங்களுக்கு அளிக்கும்.

உங்கள் தேடல், பக்தி உண்மை எனில் – நீங்கள் மனதார நினைத்து வழிபாடு செய்யும் சித்தர் தரிசனம் உங்களுக்கு சதுரகிரியில் நிச்சயம் கைகூடும். இதை நிறைய பக்தர்கள் அனுபவித்து இருப்பதால் , இப்போதெல்லாம் சதுரகிரியில் கூடும் கூட்டத்திற்கு குறைவில்லை..

சாதாரண மலைகளைப் போலல்ல இது. வீரியம் நிறைந்த வினோதமான மலை. கணக்கற்ற இரகசியங்களைத் தன்னுள்ளே பொதித்துக் கொண்டு அமைதியாய்க் காணப்படும் அபூர்வ மலை.
சித்தர்களின் இராஜ்ஜியமாகவும், அபாயகரமான காட்டுவாழ் விலங்கினங்களின் புகலிடமாகவும், அபூர்வ சக்திகள் படைத்த மூலிகைகளின் வாழ்விடமாகவும் விளங்கும் இம்மலை, பரம்பொருள் சிவபரமாத்மாவின் அருட்கடாட்சம் பெற்றபடியால் சிவன்மலை என்றும் மகாலிங்க மலை என்றும் அழைக்கப்படுகிறது.
சிவனும் பார்வதி தேவியும் இங்கே நிரந்தரமாகத் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சித்தர்களுக்கு வாக்குத் தந்திருப்பதால் இவ்விடம் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.

இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களின் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது. இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் தங்கியிருந்து சிவனை வணங்கி வழிபட்டு வந்ததுடன் மக்களின் நோய் தீர்க்கும், துன்பங்களைக் களையும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ராய்ச்சிகளிலும் சித்தர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
சித்தர்பூமியாம் சதுரகிரியில் எண்ணற்ற மூலிகைகள் நிறைந்த வனம் உள்ளது. இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. சித்தர்களின் அதிர்வலைகள் மலையெங்கும் நிறைந்திருப்பதால் அதில் சிறிதாவது தமது உடலில் ஒட்டட்டும் என பக்தர்கள் விரும்பி இங்கு வருகின்றனர்.


Thursday, October 1, 2020

Tuesday, September 22, 2020

நவராத்திரி!



ம்பிகையைக் கொண்டாடும் காலம் நவராத்திரி. சிவனுக்கு ஒரு இராத்திரி சிவராத்திரி. ஆனால், அம்பிகைக்கு ஒன்பது இராத்திரி நவராத்திரி. அனைத்து இயக்கங்களுக்கும் ஆதார சக்தியாக இருப்பவள் அம்பிகையே.

நவ என்றால் ஒன்பது என்று மட்டுமல்லாமல், புத்துணர்ச்சி என்ற பொருளும் உண்டு. நவராத்திரி ஒன்பது நாள்களும் பூஜை செய்து தேவியை வழிபட்டால், நம் மனதில் புத்துணர்ச்சி பெருகும். மனம் செம்மையாகும். செம்மையான மனதின் எண்ணங்களும் செம்மையாகும். செயல்களும் செம்மையாகும்; வாழ்க்கையும் செம்மையுடன் சிறப்பாகும். நவகிரகங்களினால் ஏற்படக்கூடிய சகல விதமான தோஷங்களையும் நீக்கும்.  எனவே நவராத்திரி காலங்களில் அம்பிகையைப் பக்தி சிரத்தையுடன் வழிபடவேண்டும். 

கேதார கௌரி விரதம்!

கேதார கௌரி விரதம் சிவபெருமானை நோக்கி செய்யப்படும் விரதங்களில் ஒன்று,பொதுவாக பெண்கள் தனது கணவனுடன் இணைபிரியாது வாழவும், மணமாகத பெண்களாக இருந்தால் நல்ல கணவன் கிடைக்க வேண்டி விரதம் இருப்பார்கள்.

இமயமலை உள்ள கேதாரம் என்ற திருத்தலத்தில் சிவபெருமானை வணங்கி பார்வதி தேவி அதாவது "கௌரி "விரதத்தினை மேற்கொண்டார், அதனால் அந்த விரதத்திற்கு கேதார கௌரி விரதம் என்ற பெயர் வந்தது, இந்த விரதம் மேற்க்கொண்டதால் தான் உலகை காத்து இரட்சிக்கும் சிவபெருமானுக்கு சமமான நிலையில் அன்னை பார்வதிதேவி பராசக்தியாகப் போற்றப்படுகிறார்கள்.

சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து சிவனின் இடது பக்கம் பாதி உடம்பை பெறக்காரணம் கேதார கௌரி விரதமாகும்.

புரட்டாசி மாத சுக்கிலபட்ச தசமி முதல் சதுர்த்தசி (ஐப்பசி தீபாவளி அமாவாசை ) 29 நட்கள் விரதம் இருக்க வேண்டும், இந்த விரதம் எடுப்பவர்க்ள் சிவ-பார்வதியால் சகள சௌபாகியங்களும் பெற்று தீர்க்க சுமங்கலியாக வாழ்வார்கள் என புராணங்கள் கூறுகின்றன

தீபாவளிப் பண்டிகை பூஜைகள் முடிந்த பின் பூஜையறையில் விளக்கேற்றி சிவன் பார்வதி படத்தின் முன்பு அமர்த்தி தியானம் செய்ய வேண்டும், ஓம் நமச்சிவாய என்னும் மந்திரத்தை நாள் முழுவதும் துதிக்க வேண்டும்.

விரதம் ஆரம்பித்த நாளிலிருந்து 29 இழைகளைக் கொண்ட நூலில் நாள்தோறும் ஒவ்வொரு முடிச்சுகளாக இடப்பட்டு, இறுதி நாளில் அந்த நூலைக்கொண்டு ஆண்களின் வலது கையிலும், பெண்களின் இடதுகையிலும் அணிந்து கொள்வார்கள், மேலும் 20 நாளும் ஒரு பொழுது, உணவருந்தி சதுர்த்தசி அன்று உபவாசம் இருந்து மறுநாள் காலை சூரிய உதயதிற்கு முன் குளித்து முடித்து உணவருந்தி விரதத்தை முடிப்பார்கள்.

Saturday, September 19, 2020

ஆச்சியின் விரதம்!

ஆச்சி ஆச்சி என்டு படலையில் யாரோ கூப்பிடும் குரல் கேட்டு ஆச்சிக்கு முழிப்பு வந்தது. நாலு நாளாக ஆச்சிக்கு நாரி நோவு அதுதான் கொஞ்சம் அசந்து படுத்துட்டா போல, இல்லாட்டி ஐந்து மணிக்கெல்லாம் எழும்பிடுவா ஆச்சி. மெல்லமா எழும்பிப்போய் படலையை எட்டிப்பார்த்து யாரது என்டா ஆச்சி. நான் அன்னம் என்டு பதில் வரவே, படலையைத் திறந்து, வாடியம்மா வா என்டா ஆச்சி. அன்னம்தான் ஆச்சியின் வலக்கை. இப்போ நாரிநோவு எப்படி இருக்கு என்டு அன்னம் கேட்க, கொஞ்சம் பரவாயில்லை என்டா ஆச்சி. அன்டைக்கு முதலாவது புரட்டாதிச்சனி, ஆச்சி எப்பவும் ஆச்சாரமாக இருப்பா. அதுவும் விரதங்கள் என்றால் சொல்லவும் வேண்டுமா? அதுதான் அன்னம் விடியமுதலே ஆச்சி வீட்டே.  தேத்தண்ணி போட்டுத்தாரேன் குடிச்சுட்டு வேலையைப்பாரு என்டு அன்புக்கட்டளை போட்டா ஆச்சி. ஆச்சியின் இந்த குணமே அனைவரையும் அசத்தும். அன்னம் தேத்தண்ணியைக் குடிச்சிட்டு தன்டை வேலையைத் துவங்க பொழுதும் விடிஞ்சுடுத்து. ஆச்சிக்கு எல்லாமே சுத்த பத்தமாக இருக்கோனும் என்டு அன்னத்துக்கு நல்லாத்தெரியும். அன்னமும் லேசுப்பட்ட ஆள் இல்லை, கட கட என்டு எல்லா வேலைகளையும் செய்வத்தில் கில்லாடி. மள மளவென வீடு, வளவு கூட்டி, வீட்டைக் கழுவி, அடுப்படியை மெழுகி, விரத நாட்களில் சமைக்கும் பாத்திரங்களை அலுமாரியில் இருந்து எடுத்து அதையும் நல்லா கழுவி, சாமி அறையில் சாமிப்படங்களைத் துடைத்து, விளக்குகளை விளக்கி முடிக்க மணி ஒன்பது இருக்கும். ஆச்சி விரததினங்களில் காலமை சாப்பிடமாட்டா. ஆனால் அப்புக்கும், அன்னத்துக்கும் பலகாரம் செய்து கொடுக்கும் பவளத்திடம் இடியப்பமும், சம்பலும், சொதியும் வாங்கினா. அப்புவையும், அன்னத்தையும் சாப்பிட வைச்சு, சுடச் சுட பால் காய்ச்சி அதில் கோப்பி போட்டு இருவருக்கும் கொடுத்து தனக்கும் சுடுதண்ணிப்போத்தலில் விட்டு வைச்சா. ஆச்சியும் அன்னமும் குளிச்சு முடிச்சு, சமைக்க துவங்கியாச்சு.  விரத சாப்பாடு ஆச்சே.... சும்மா கம கம என நாலாபக்கமும் வாசனை பரவியது. பன்னிரண்டு மணிக்கெல்லாம் சாப்பாடு தயார். காக்காக்கு நல்லெண்ணெய் விட்டு விரதச்சாப்பாடு படைத்து, மூவரும் வாழையில் சாப்பிட்டனர். அன்னத்துக்கு ஒரு கிண்ணத்தில் சாப்பாடு போட்டு கொடுத்து விட்டா ஆச்சி. அப்புவும், ஆச்சியும் விறாந்தையில் கிடந்த கயிற்றுக்கட்டிலில் இருந்து வெத்திலை போட்டுக்கொண்டிருந்தனர். அப்போ ஆச்சி பின்னேரம் ஒருக்கா சிவன்கோயிலுக்குப் போய் சனீஸ்வரனுக்கு எள்ளுச்சட்டி எரிப்பம் என்டு சொல்ல அப்புவும் ஓம் ஓம் என்று தலையாட்டினார்.   

 

பனிசும் ஆச்சியும்!

பக்கத்துவீட்டுப் பாட்டிக்கு பனிசு என்டால் நல்லாப்பிடிக்கும் என்டு ஆச்சிக்கும் தெரியும். நல்ல பனிசு கிடைச்சால் நாலு வாங்கிக்கொண்டுவந்து பாட்டிக்குக் கொடுப்பா. அன்டைக்கும் அப்படித்தான், பேக்கரிப்பக்கம் போன ஆச்சி அப்புக்குப் பிடித்த ஜாம்பனிசும், பாட்டிக்குப் பிடித்த கறிபனிசும் வாங்கிக்கொண்டு வந்தா. பாட்டிக்கு நல்ல சந்தோசம். அப்புவும் ஜாம்பனிசை தேத்தண்ணியில் தோச்சு சுவைத்துச் சாப்பிட்டார்.

பக்கத்துவீட்டு பருப்புவடை!

ஆச்சியை பக்கத்துவீட்டுப் பாட்டி வேலியால் கூப்பிடும் சத்தம் கேட்டு பாயில் படுத்திருந்த அப்புவும் நித்திரை குழம்பி எழும்பினார். இஞ்சாருமப்பா பக்கத்துவீட்டுப் பாட்டி உன்னை கூப்பிடுறா என்றார். குசினியில் வேலையாய் இருந்த ஆச்சிக்கு பாட்டி கூப்பிட்ட சத்தம் கேட்கவில்லை. உடனே விறு விறு என்று வேலிப்பக்கம் போனா. பாட்டி கையில் ஒரு சரை. சரையில் என்ன இருக்கு என்டு பாட்டியிடம் கேட்டா ஆச்சி. உனக்குப்பிடித்த பருப்புவடைகள் இருக்கு என்று சொல்லிச் சிரிச்சா பாட்டி. ஆச்சியும் சிரிச்சிக்கொண்டு சரையை வேலியால் வாங்கினா.

 

கொழுக்கட்டை!

பக்கத்துவீட்டு பாட்டியின் வீட்டில் விசேசம். பாட்டியின் பேத்திக்கு கொழுக்கட்டை கொண்டுபோகும் விழா. கொழுக்கட்டை அவிப்பது என்றால் ஆச்சிக்கு கைவந்தகலை. பாட்டி ஆச்சியிடம் வந்து கொழுக்கட்டை அவிக்கக் கூப்பிட்டா. ஆச்சியும் அப்புவிடம் சொல்லிவிட்டு அங்குபோய் ஊர்க்கதை கதைச்சு மெனக்கெடாமல், அரைமணி நேரத்தில் ஐம்பது கொழுக்கட்டைகள் பிடித்தா. அனைவரும் ஆச்சியைப்பார்த்து சபாஷ் போட்டனர்.

அம்மன்கோயில் மோதகம்!

அன்று ஆடி வெள்ளிக்கிழமை. ஆச்சி அம்மன்கோயில் விசேடபூசைக்கு காசு கட்டியிருந்தா. அப்புவும், ஆச்சியும் அம்மன்கோயிலுக்குப்போய் விசேடபூசைகளைச் சிறப்பாக செய்தனர். அனைவருக்கும் அம்மன்கோயில் மோதகம் பிரசாதமாக வழங்கப்பட்டது. அம்மன்கோயில் மோதகத்தின் சுவையே தனிதான். அம்மனின் அருளும்தான்🙏.

பனங்காணியின் பனம்பழம்!

அப்புக்கும், ஆச்சிக்கும் வீட்டுக்குப் பக்கத்தில் பனங்காணி ஒன்டு இருக்கு. முந்தி நிறைய பனைகள் அங்கே நின்டது, இப்போ ஆறுதான் இருக்கு. ஆச்சி வலு கெட்டிக்காரிதானே, ஆறு பனையாலும் வருமானம் பல பாத்திடுவா. இப்போ பனம்பழக்காலம் தானே, ஆச்சியும் பனங்காணியில் இருந்து ஒரு பனம்பழத்தை எடுத்துக் கொண்டு வீட்டை போனா. அதைக்கண்ட அப்புவும் ஆச்சியிடம் இன்டைக்குப் பின்னேரம் பனம்பழப்பணியாரமோ என்றார். ஆச்சியும் ஓம் ஓம் என்டு சிரிச்சா!

ஆச்சியும் சங்கக்கடையும்!

அன்று சனிக்கிழமை, ஆச்சி அருகில் உள்ள சங்கக்கடைக்கு வழமையாக போகும்நாள். அப்புவிடம் சொல்லிவிட்டு ஆச்சி தனது நடையைக்கட்டினார். ஆச்சியைக் கண்டதும் சங்கக்கடையில் வேலைசெய்யும் எல்லோருக்கும் வலு சந்தோசம், ஆச்சி சங்கக்கடைக்குப் போகும்போதெல்லாம் அவையளுக்கு ஏதாவது ஒரு நொறுக்குத்தீணி  செய்து கொண்டுபோய் பாசத்துடன் கொடுப்பா. அன்டைக்கும் அவகையில் பகோடா இருந்துச்சு. சங்கக்கடையில் பல சாமான்களோடு வெள்ளைஎள்ளும் அரைக்கிலோ வாங்கினா ஆச்சி. அங்கு வேலைசெய்யும் ஒருவர் ஆச்சியின் சாமான்கள் உள்ள பையை தன்டை வண்டியில் கொழுவினார். ஆச்சியும் பாவம்தானே, அவையள்தான் ஆச்சியின் சாமான்களை தங்கடை வண்டியில் கொண்டுபோய் ஆச்சியின் வீட்டே கொடுப்பினம். அடுத்தமுறை எங்களுக்கு எள்ளுப்பாகுவா ஆச்சி என்டு அவர் கேட்க, ஆச்சியும் சிரிச்சா.

அப்புவும் ஆச்சியும் ஐசும்!

அப்புவும் ஆச்சியும் ஐசுபழம் என்டால் உடனே உருகிவிடுவார்கள் அது ஐசு விற்பவருக்கும் நல்லாத்தெரியும். அதனாலேயே அவரும் அடிக்கடி அந்தப் பக்கம் ஐசு வண்டியுடன் வருவார். ஊரில் உள்ள மற்றவர்கள் இருவரையும் பார்த்து பகிடி பண்ணுவார்கள், அந்த நேரம் ஆச்சி ஐசு மேலேயே கண்ணாய் இருப்பா. அவர்கள் கதைப்பதை காதில் வாங்கமாட்டா. ஆனால் எல்லாத்தையும் மனசுக்குள் போட்டு பூட்டி வைப்பா, அவக்கு நேரம் வரும்போதெல்லாம் தன்டை மவுசை காட்டி விடுவா, ஆச்சியா கொக்கா?

 

முந்தநாள் சுட்ட முறுக்கு!

ஆச்சிக்கு முறுக்கு என்டால் கொள்ளை விருப்பம். விதவிதமாய் முறுக்கு சுட்டு சுட்டு பேணியில் போட்டு வைப்பா. முந்தநாள் உளுத்தமாவில் அரிசிமாவு, தேங்காய்ப்பால், எள்ளு, சின்னச்சீரகம் சேர்த்து சுவையான முறுக்கு செய்தா. இன்று அப்புவைப் பார்க்க அடுத்த வீட்டுத் தாத்தா கையில் நாளிதழோடு வந்தார். அப்புவும் அவரை வரவேற்று, இருவரும் திண்ணையில் இருந்து நாட்டு நடப்பு கதைத்தனர். தாத்தாக்கு முறுக்கும், கோப்பியும் கொண்டுவந்து கொடுத்தா ஆச்சி. தாத்தா முறுக்கை கொறித்தபடி அப்புவிடம் சொன்னார், கொடுத்து வைத்து இருக்கிறாயப்பா. இப்படி தினமும் விதவிதமாய்ப் பலகாரம் செய்துதார மனுசி கிடைச்சதுக்கு என்டு. அப்புவும் ஒப்புக்கு தலையாட்டினார். அப்புக்கு மட்டும் தானே தெரியும் ஆச்சிக்குத்தான் முறுக்கு பிடிக்கும் என்டு.

ஆச்சியின் (அ/ஆ)ப்பம்!

அப்புக்கு அப்பம் என்றால் அலாதிப் பிரியம் ஆனால் ஆச்சிக்கோ அலுப்புவேலை. மாவிடிக்க ஆள் பிடித்து, கள்ளு வாங்க காவல் இருந்து, பதமாய் குழைத்து, இரவெல்லாம் புளிக்க வைத்து...... காலமை வேளைக்கு எழும்பி, தேங்காய் திருவி, முதல் பால் எடுத்து, அப்பச்சட்டியில் பக்குவமாய் மாவை வார்த்து ஒரு சுழட்டு, ஒரு சுத்து சுத்தி எடுத்து, பால் அப்பம், வெள்ளை அப்பம் எனச்சுட்டு எடுக்கிறதுக்குள் ஆச்சி ஆடிப்போய் விடுவா. அன்று காலமை பக்கத்து வீட்டு பாட்டியுடன் வேலியால் கதைச்ச ஆச்சிக்கு அந்தப்பாட்டி அப்பத்துக்கு அரிசி ஊற வைக்கப் போற விசயம் தெரிந்ததும், ஆகா.... என்று ஆச்சி மனதில் மின்னல் அடித்தது, பாட்டியிடம் ஆச்சி சிரிச்சு சிரிச்சு கதைச்சு, அரைக்கொத்து அரிசியையும், இரண்டு தேங்காயையும் கொடுத்து பத்து அப்பத்துக்கு சொல்லிவிட்டா. பாவம் அந்தப்பாட்டி நல்லா மாட்டிக்கொண்டா. ஆச்சி தன்டை திறமையை அப்புவிடம் சொல்லிப் பெருமைப்பட்டா. அப்புக்கும் தெரியும்தானே தன்டை மனுசியின் சகலகலாவல்லமை. 

 

அப்புக்கு ஆச்சி சுட்ட வடை!

அடுத்தநாள் பின்னேரம், ஆனால் இன்று மழை இல்லை, மப்பாக இருந்தது. அப்பு அதே சாய்மனையில் சும்மா படுத்து இருந்தார். ஆச்சிக்கு மனசு கேட்கவில்லை, குசினிக்கு விறு விறு என ஓடினா, கொஞ்சத்தாலே வடை பொரித்த வாசம் வாசல் வரை வரவே, சும்மா படுத்திருந்த அப்புவும் எழுந்து, பொக்கைவாய் சிரிப்புடன் குசினியை எட்டிப்பார்த்தார். அப்போது பக்கத்து வீட்டுத் தாத்தாவின் கூப்பிடுகுரல் படலையால் வரவே, அவரிடம் அப்பு தன்ரை மனிசி தனக்குப் பிடித்த தட்டைவடை சுடுறா நாளைக்கு கதைக்க கோயிலடிக்கு வாரேன் என்றார். அதைக் கேட்ட ஆச்சி சிரித்துக் கொண்டே அப்புவிடம் இஞ்சாருங்கோ இன்டைக்கு உங்களுக்கு சுக்கு தேத்தண்ணி வேணுமோ என்டா, அப்புவும் ஓம் ஓம் என்று தலையாட்டினார். ஆச்சியும் கையில் சுக்கு தேத்தண்ணியுடனும், வடையுடனும் நின்டா. அப்புக்கு ஒரே புழுகு. ஆச்சியின் வடைக்கிண்ணியை எட்டிப்பார்த்த அப்புக்கோ பேரதிர்ச்சி! அப்புக்கும் இரும்பு மனசுதான். அப்புக்கு ஆச்சி சுட்ட வடை தட்டைவடை இல்லை மெதுவடை!

தேநீரும், மொறு மொறுவும்!

மாலை நேரம் அடைமழையும் பெய்யுது, சாய்மனையில் படுத்திருந்து வானொலியில் ஒலிபரப்பிய பழைய பாடல்களை அப்பு கேட்டுக் கொண்டிருந்தார். ஆச்சியும் அவர் பக்கத்திலிருந்து வெத்திலை போட்டுக் கொண்டிருந்தா. ஆச்சியிடம் அப்பு இஞ்சாருமப்பா, ஒரு தேத்தண்ணி போடு என்றார். வேறு ஏதேனும் உங்களுக்கு வேணுமோ என்று ஆச்சி அப்புவிடம் கேட்க, பொக்கைவாய் சிரிப்புடன் அப்புவும் சொன்னாரே ஒரு பதில்...... ஆச்சி ஆடிப்போனா,  அதிர்ச்சியில் ஆசுப்பத்திரிக்கு போயிருப்பா என்டாலும் ஆச்சிக்கு இரும்பு மனசுதான். என்ன கேட்டார் அப்பு? தேத்தண்ணியும், தனக்குப்பிடித்த மொறு மொறு தட்டைவடையும்!

நெல்லின் வாசனை!

கிராமத்து மண் வாசனை அதிலும் மழைத்துளி பட்ட புழுதி மண் இயற்கை வாசனை, பக்கத்து வீட்டு பாட்டியின் தாளிப்பும் வாசனை, சாணத்தால் மெழுகிய அடுப்பும் வாசனை அதில் சுட்ட தோசையும் வாசனை. மல்லிகை, முல்லை விரிதலும் வாசனை. தலைக்குப் போடும் சாம்பிராணியும் வாசனை, கோயில் ஐயர் அவிக்கும் மோதகமும் வாசனை, பனம்பழமும், பினாட்டும் வாசனை எல்லாத்திலும் என் அம்மம்மாவின் சேலை இன்னும்  வாசனை..... இப்படி ஏராளம், ஏராளம்.....


நெல்மணிகள் அவிக்கும் வாசனை அடடா!

ஒற்றைப் பனையும் ஒரு குடும்பமும்!

"ஒற்றைப்பனை இருந்தால் ஒரு குடும்பத்துக்கு போதும்" இது கிராமத்து முதுமொழி. ஓரு பனையும், ஒரு பசுவும் இருந்தாலே வாழ்வாதாரம் வளமாகும் அன்று. இன்றோ பனையையும், பசுவையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். பனையின் பலனோ பல, பூலோக கற்பகதரு!

 

நெல்லும் வாழ்வும்!

"வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்" ஔவைப்பாட்டியின் பாடல்களில் ஒன்று. வரப்பு என்பது ஒரு வயலுக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும், வரப்பு உயர்ந்தால் வேளாண்மை சிறக்கும் என்பதையும், வேளாண்மை சிறந்தால்தான் அதை விளைவித்த விவசாயிகளும், குடிமக்களும் நல்வாழ்வு வாழ்வார்கள் என்பதையும் கூறி அப்படியான நாடு செல்வச் செழிப்புடன் விளங்கி, செங்கோல் உயர்ந்து அரசனும் அவன் ஆட்சியும் சிறக்கும் என்று நாலடிக் கவியில் நயம்படக் கூறியுள்ளார். வயலின் வரப்பை உயர்த்தி நீர் உயரப் பாடுபட்ட விவசாயிகளின் இன்றைய நிலையோ கண்ணீரில்!

பழமையில் புதுமை!

புதுமைகள் செய்திட வேண்டும் அதை பழமையிலும் புகுத்திட வேண்டும். நன்மைகள் செய்திட வேண்டும், நல்ல எண்ணங்கள் எப்பொழுதும் வர வேண்டும்.

ஆ (ல/ழ) விழுதுகள் ஆயிரம் வேண்டும்!

ஆலமரமாய் நீ இருந்தாலும் உனக்கும் வேண்டும் உறவுகள் பல. உறவுகள் பலரகம், ஒவ்வொன்றும் ஒருவிதம், ஆனாலும் வேண்டும் விழுதுகளாய் சில!

கொண்டையில் கொண்டல் கொண்டாள்!

பூசுமஞ்சள் பூசிய மஞ்சள்காட்டு மைனா சூடிக்கொண்டாள் கொண்டையில் கொண்டலை💛

நல்ல நட்பு!

நல்ல நட்பு நாளும் வேண்டும். நல்லது சொல்லவும், நட்பு பாராட்டவும். நல்ல நண்பர்கள் அமைவதெல்லாம் நாம் செய்த நல்வினையே! நட்புக்கு இலக்கணம் நாம் வைக்கும் நம்பிக்கை.  நம்பிக்கையின் நன்மதிப்பு இருவருக்கும் தெரியவேண்டும். ஏற்றத்தாழ்வு பார்த்து வந்தால் அது நட்பல்ல வெறும் நடிப்பு.  இன்பத்தில் மட்டுமல்ல துன்பத்திலும் வேண்டும் நட்பு. முன்னோர் சொன்ன அகநட்பே நல்ல நட்பு. தோள் கொடுக்க நல்ல நட்பிருந்தால் வெல்லலாம் இந்த உலகை!

முடிவிலி முண்டாசுக்கவி!

பாட்டன் பாரதி! முறுக்கு மீசை மிடுக்குத் தாத்தா. பாப்பா பாட்டுப் பாடி பாலர்களையும் ஆடிப் பாடவைத்த பார்கவி. தமிழால் தானும் உயர்ந்து தன்னால் தமிழையும் உயர்த்திய மாமேதை. அனல் பறக்கும் அவர் சொல்லும், தமிழ் வளமும் எட்டு திக்கும் திணரடிக்கும். புதுநெறி காட்டிய புலவன். புதுமைகள் பல செய்த நவீனகர்த்தா. அறிவியல் பார்வை நல்கிய கவிஞானி. மெய்ஞ்ஞான விஞ்ஞானங்களின் கூட்டுச் சேர்க்கை அவர் படையல். புதிய எதிர்காலத்தை உருவாக்கக் கனவு கண்ட கவிக்குயில். முண்டாசுக்கவி வாழ்ந்த காலமோ சொற்பம் ஆனால் அவர் பெயர் வாழும் காலமோ முடிவிலி.